| nilgiris botanical garden employees prepares garden for new season

இந்நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீஸனுக்காக பிரஞ்சு மேரிகோல்டு, பால்சம், டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஆஸ்டர், கேலண்டுலா, பிகோனியா, லில்லியம், உள்ளிட்ட 75 ரகங்களில் 1.70 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதைக் குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குநர் தொடங்கி வைத்தார். தோட்டகலைப் பணியாளர்கள் கொட்டும் மழையிலும் மலர் நாற்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

குன்னுார் சிம்ஸ் பூங்கா

குன்னுார் சிம்ஸ் பூங்கா

இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறையினர், “கொரோனா காரணமாக இரண்டாவது ஆண்டாக முறையாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் போனது. கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்தால் நடப்பாண்டு இரண்டாம் கட்ட சீஸன் நடத்த வாய்ப்பு உள்ளது. அதற்காக பூங்காவை பொலிவுப்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: