Chennai Rains: `இந்த 3 ஆப்கள் மூலம் மழை வருவதை முன்பே அறிந்துகொள்ளலாம்!’ – வானிலை மைய இயக்குநர் | imd chennai director suggests to 3 apps to get updates on tamilnadu rains

நேற்றைய தினம் கிட்டத்தட்ட மாலை 6 மணியளவில் தெளிவாக இருந்த வானம் திடீரென அடர்த்தியான கருநிறத்துக்கு மாறியது. நிறம் மாறிய அதே நொடியில் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் பூந்தூறல் போட்டுவிட்டு, பிறகு இடியுடன் கொட்ட ஆரம்பித்தது மழை. சில நிமிடங்கள் முன்பு வரை வானம் நீலநிறமாக இருந்ததால் இயல்பாக நடந்துகொண்டிருந்த, வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மக்கள் பதறிக்கொண்டு வேகமாயினர். திடீரென, ஏன் இந்த அளவுக்கு நேற்றைய தினம் மழை பெய்தது? காலநிலைகளை நம் செல்போனிலேயே கூகுள் அலர்ட் செய்தாலும் அது அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. நம் ஊரின் வானிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு, நமக்கென்று செயலிகள் இருக்கின்றனவா என்பது பற்றி வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்களிடம் கேட்டோம்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

“தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருக்கும்போது மாலை நேரங்களில் இப்படி திடீரென மழைப்பொழிவு ஏற்படுவது சகஜம்தான். அதுவும், நாம் கடலோரப்பகுதியில் இருப்பதால் மழை இன்னும் அதிகமாகவே இருக்கும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் தென்மேற்கு காற்று வலுவாக இருக்கும்போது, மேற்கு திசைக்காற்றும் கிழக்கு திசைக்காற்றும் சந்திக்கின்ற பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: