Carbon Trading `உங்கள் புண்ணியத்திற்கும் ஒரு விலை உண்டு!’ – உலகைக் காக்குமா கரிம வியாபாரம்? | Does Carbon emission trading really can be a solution to control GHG emissions?

கடந்த மாதம், சீனா தன்னுடைய தேசிய கரிம சந்தையான, கரிம வெளியீட்டு வர்த்தக அமைப்பைத் (Emissions trading system, ETS) தொடங்கியது. இது, 2060-ம் ஆண்டுக்குள் சீனாவின் கரிம சமநிலையை அடைய உதவுவதோடு, பசுமை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 3,000 ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. கரிம சந்தையில், சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 440 மில்லியன் டன் கரிம வெளியீடு இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், கரிம வர்த்தகம் ஒரு தீர்வாகச் சொல்லப்பட்டாலும், இது மிகவும் சிக்கலானது என்றும் சூழலியல் ரீதியாகச் சரிப்பட்டுவராதது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், பசுமைப் பொருளாதாரத்தில் இது நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுவரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதெல்லாம் சரி, கரிம வர்த்தகம் என்றால் என்ன? கரிம வெளியீட்டை வைத்து என்ன வர்த்தகம் செய்ய முடியும்?

சராசரியாக, வர்த்தகத்தில், விற்பது, வாங்குவது என்று வந்தால், அது ஒரு குறிப்பிட்ட சரக்கு (அது நிலமாகவோ, பொருளாகவோ, இணையதளமாகவோ, சேவையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சார்ந்ததாகவே இருக்க முடியும். ஆனால், கரிம வர்த்தகத்தைப் பொறுத்தவரை, வர்த்தகம் வேறு மாதிரியானது. இங்கு விற்பனை செய்பவர் வாங்குபவருக்கு, அவர் வெளியிடாத கரிம வாயுவை விற்கிறார். இதைத் தத்துவார்த்தரீதியாக இப்படிச் சொல்லாம்.

பாவம் செய்யப்போகிறவர் பாவம் செய்யாதவரின் புண்ணியத்தைக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார். அதன்மூலம், செய்யப்போகும் பாவத்தை வாங்கிய புண்ணியம் சமன்படுத்திவிடுகிறது.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: