21 நாள்களில் 2 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு; உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற திண்டுக்கல்! | dindigul district enters into 4 world record books for rain water conservation

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக மழைப்பொழிவு 1,000 மில்லி மீட்டர் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மில்லி மீட்டர் மழை பொழியும்போது ஒரு லிட்டர் மழைநீரை சேமிக்கலாம். அதனடிப்படையில், திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள 611 இடங்களில் உள்ள 1,115 கட்டடங்களில் மொத்த பரப்பளவு 1,03,000 சதுர மீட்டர் ஆகும். இதனால் ஒரு ஆண்டுக்கு 10.3033 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடிகிறது. இது ஒரு சராசரி அணையின் நீர் சேமிப்புக்கு இணையானதாகும்.

உலக சாதனை

உலக சாதனை

குறுகிய காலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாவட்ட நிர்வாகம் உருவாக்கியதை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களைச் சார்ந்த 11 ஆய்வாளர்கள் 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து இந்திய துணைக் கண்டத்தில் வேறு எங்கும் இதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்பதால், 4 சாதனை புத்தகங்களிலும் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு திட்டம் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, உலக சாதனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் உலக சாதனைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: