வெள்ளைப் புலிகளின் காட்டில் மாயமான கண்காணிப்பு கேமராக்கள்; கடத்தல் கும்பலின் வேலையா? | two cameras which kept for monitoring the white tigers is missing

கேமராக்கள் மாயமான விவகாரத்தை நம்மிடம் பகிர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர், “கேமராக்கள் பதிவாகியிருக்கும் புகைப்படங்களை பார்ப்பதற்காக நமது பணியாளர்கள் சமீபத்தில் சென்றபோது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இரண்டு கேமராக்கள் காணாமல் போனதை கண்டறிந்து உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்களும் கேமராவைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கேரளா வழியாக ஊடுருவிய மரக்கடத்தல் மற்றும் வேட்டைக் கும்பல் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கீயூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்”என்றார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்

கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்

இது குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர்கள், “வெள்ளைப் புலிகள் உலவும் குறிப்பிட்ட பகுதிகளில் 2 கேமராக்கள் காணாமல் போயிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா போன்ற ஒரு சில நாடுகளில் வெள்ளைப் புலிகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. இவற்றை தேடி உலகம் முழுவதும் பெரிய வேட்டைக் கும்பலே இயங்கி வருகிறது. இதனால் இவற்றுக்கு கள்ளச்சந்தையில் பெரும் மதிப்பு இருக்கிறது. உடனடியாக கேமராக்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

(வாசகர்களுக்கான குறிப்பு: வெள்ளைப் புலிகளின் பாதுகாப்பு கருதி அவை வாழும் குறிப்பிட்ட வனத்தின் பெயரை குறிப்பிடவில்லை)

நன்றி

Leave a Reply

%d bloggers like this: