விடுதலைக்குத் தயாராகும் ரிவால்டோ யானை; கூண்டிலிருந்து வெளியேற்றும் முடிவால் மகிழ்ச்சி! |nilgiris rivaldo elephant is all set to be released into the forest

சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மசினகுடி சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அலைந்து வந்த ரிவால்டோ என்ற ஆண் காட்டுயானைக்கு தற்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், ரிவால்டோவுக்கு கரும்பு மற்றும் பழங்களைக் கொடுத்து நடக்கவைத்தே தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

தும்பிக்கையில் ஏற்பட்ட காயம்

தும்பிக்கையில் ஏற்பட்ட காயம்

இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்ததால், வாழைத்தோட்டம் பகுதியில் க்ரால் எனப்படும் மரக்கூண்டை அமைத்து படிப்படியாக பழக்கப்படுத்தி மரக்கூண்டில் அடைத்தனர். க்ராலில் ஒரு மாதத்திற்கும் மேலாக ரிவால்டோ யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரிவால்டோ யானையின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மீண்டும் வனத்துக்குள் விடுவிப்பதா அல்லது முகாம் யானையாக மாற்றுவதா என முடிவெடுக்க 8 நபர்கள் கொண்ட சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: