வாய், பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை எதுவும் வராம இருக்க சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன

 

​வாய் ஆரோக்கியம்

பொதுவாக வாய்வழி சுகாதாரத்தை பேண வேண்டும் என்றால் இரண்டு முறை பல் துலக்குதல், தினமும் நன்றாக வாயை கொப்பளித்தல், பல் மருத்துவரை தவறாமல் சந்திப்பது போன்றதைத் தான் நினைக்கின்றனர். ஆனால் உங்க வாய்வழி சுகாதாரத்தை பேண உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சில வகை உணவுகளை சாப்பிடும் போது அது உங்களுக்கு பல் சிதைவை ஏற்படுத்தலாம். குழந்தைகள் அதிகமாக சாக்லேட்டுகள், இனிப்புகள் சாப்பிடுவது அவர்களுக்கு பல் சிதைவை ஏற்படுத்தக் கூடும்.

​பாக்டீரியா பெருக்கம்

இது வாயில் பாக்டீரியா பெருக்கத்தை உண்டாக்கி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. உணவில் இயற்கையாக சேர்க்கப்படும் அனைத்து சர்க்கரைகளும் இணைந்து வாயில் உள்ள பாக்டீரியாவால் நொதித்தல் செயல்முறை மூலம் உடைக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்த அமில படம் பற்களின் எனாமல் மற்றும் கால்சியத்தை அரித்து பற்சொத்தையை ஏற்படுத்துகிறது.

எனவே உங்க வாய்வழி சுகாதாரத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​சர்க்கரை நிறைந்த உணவுகள் :

சர்க்கரை உணவுகளை தவிர்த்து விடுங்கள். கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் அமில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போனது பல் எனாமல் சீக்கிரமாக அரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பல்லுக்கு அதிக சிதைவு மற்றும் உணர்திறன் பாதிப்பு ஏற்படலாம். இந்த அரிப்பு பாக்டீரியாவால் ஏற்படாமல் அமில துகள்கள் பற்களின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு பல் சிதைவை உண்டாக்குகிறது.

​வாய் ஆரோக்கியம் பேண

நீங்கள் சாப்பிட்ட பிறகு பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துகள்களை நீக்க வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

இனிப்புகள், செயற்கை பானங்கள், அமில உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதை தவிருங்கள்.

உங்க உணவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்ப்பது முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதை அதிகரிப்பது பல் அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது.

அதே நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் தொல்லை இருப்பவர்கள் வயிற்றில் இருக்கும் அமிலம் வாய்க்கு எதுக்களிக்கும் போது அந்த அமிலத்தால் பற் சிதைவு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

நீங்கள் மூன்று வேளை உணவு சாப்பிட்டால் இடை இடையே எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்கறி சாலட்டுகள், சூப்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுக்கலாம். இது உங்க உடலை நீரேற்றம் செய்ய உதவுகிறது.

போதுமான அளவு தூங்குங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்.

வறுத்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள். கடினமான உணவுகளை தவிருங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் நிரம்பிய சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஈறு நோய்கள் மற்றும் பற்சிதைவை தடுக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து வாருங்கள். இது வாய்வழி புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

Leave a Reply

%d bloggers like this: