வளர்ப்பு நாய்களுக்காக கொல்லப்பட்டதா சிறுத்தை? – சுருக்கு வலையில் சிக்கி பலியான சோகம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எல்லநள்ளி ஜோதிநகர் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் சிறுத்தை ஒன்று உடல்நிலை சரியில்லாத நிலையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சிறுத்தைக்கு சுருக்கு வைத்து கொன்ற கொடூரம்

Also Read: நீலகிரி: தேயிலைத் தோட்டத்தில் மர்மமாக இறந்துகிடந்த பெண் சிறுத்தை! – விஷம்வைத்து கொல்லப்பட்டதா?

நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை ஒன்று சுருக்கு வலைக் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். மீட்பு உபகரணங்களோடு களமிறங்கிய வனத்துறையினர், வலையில் சிக்கியிருத்த சிறுத்தையை மீட்க சுமார் 5 மணி நேரம் போராடினர். கால தாமதம் காரணமாக அந்த சிறுத்தை வனத்துறையினர் கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த கொடூரம் குறித்து பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபோலா,“இறந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. சுருக்கில் சிக்கி ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிலத்தின் உரிமையாளர்‌ மற்றும் அருகில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

சிறுத்தைக்கு சுருக்கு வைத்து கொன்ற கொடூரம்

Also Read: நீலகிரி: யானையைத் தொடர்ந்து சிறுத்தை..! – கூடலூரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்?

இதன் உண்மை நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்த வனத்துறை ஊழியர் ஒருவர்,“ இந்த ஏரியால ஒருத்தர் மூணு நாய்களை வளர்த்து வருகிறார். அடிக்கடி இந்த ஏரியால சிறுத்தை நடமாட்டம் இருப்பதால, நாய்கள சிறுத்தை தாக்காமல் இருக்க பைக் பிரேக் கம்பியால சுருக்கு வலை செஞ்சி வேலியில பொருத்தியிருக்கார்.இதை தெரியாமல் வந்த சிறுத்தை வலையில் சிக்கி பரிதாப இறந்தது”என்றார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: