மக்கள் வலி-யில் அரசின் வருமானம் 88% உயர்வு.. ரூ.3.35 லட்சம் கோடி வசூல்..! | Lockdown imposed FY21 Modi Govt excise collections on petrol, diesel jump 88% to Rs 3.35 lakh crore

மோடியின் ஒன்றிய அரசு

மோடியின் ஒன்றிய அரசு

மோடி தலைமையிலான மத்திய அரசு மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி மூலம் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 88 சதவீதம் அதிகமாகும்.

கலால் வரி வருமானம்

கலால் வரி வருமானம்

கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் என்பது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.98 ரூபாயில் இருந்து 32.9 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசலுக்கு 15.83 ரூபாயில் இருந்து 31.8 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ரூ. 3.35 லட்சம் கோடி வருமானம்

ரூ. 3.35 லட்சம் கோடி வருமானம்

இதனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பு மூலம் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையில் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய் வரி வருமானத்தை மத்திய அரசு பெற்று, 88 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. 2020 நிதியாண்டில் இதன் அளவு வெறும் 1.78 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன்

லாக்டவுன் நிறைந்து உற்பத்தி மற்றும் போக்குவரத்து முழுமையாக முடங்கிய காலகட்டத்தில் எரிபொருள் விற்பனை மிகவும் குறைவாக இருக்கும் வேளையிலும், மத்திய அரசு அதிகமான வரி விதிப்புக் காரணமாக 88 சதவீத அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது.

ஜூன் 2021 காலாண்டு

ஜூன் 2021 காலாண்டு

இதேபோல் ஏப்ரல் – ஜூன் 2021 காலாண்டில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கலால் வரி வருமானம் 1.01 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது என மாநில நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர் விலை உயர்வு

தொடர் விலை உயர்வு

இந்த நிலையிலும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இடைவிடாமல் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால் நாட்டின் பெரும்பாலான மாநிலத்தில் பெட்ரோல் விலை ஒரு லீட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

மக்களின் வலி

மக்களின் வலி

பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தும் காரணத்தால் அரசுக்கு அதிகளவிலான வருமானம் கிடைத்தாலும், மக்கள் தான் இதன் மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள நேர்கிறது. போக்குவரத்துச் செலவுகளில் இருந்து மக்கள் வாங்கும் அனைத்து பொருட்கள் மீதும், பெறும் சேவை மீதும் தான் விழுகிறது.

மேலும் விவரங்களுக்கு

Leave a Reply

%d bloggers like this: