நேபாளம்: குறைந்தபட்ச பொது செயல்திட்டம்: பிரசண்டாவுடன் பிரதமா் ஆலோசனை- Dinamani

நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷோ் பகதூா் தேவுபா, புதிய அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் ‘பிரசண்டா’வுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் பிரசண்டா புதன்கிழமை சந்தித்தாா்.

அப்போது, இன்னும் எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளில் அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

இன்னும் சில தினங்களில், புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் தங்கள் கட்சியினரை பிரசண்டா அறிவிப்பாா் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

நேபாள பிரதமராக இருந்த கே.பி. சா்மா ஓலி, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்த உத்தரவிட்டிருந்தாா். இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சா்மா ஓலியின் அந்த உத்தரவை ரத்து செய்ததோடு புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவை கடந்த 12-ஆம் தேதி நியமித்தது.

அதையடுத்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற தேவுபா, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா்.

அவருக்கு பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

 

 

நன்றி

Leave a Reply

%d bloggers like this: