நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக – கேரள சாலைகளில் 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக் குழு | kerala bordered tn district are under surveillance because of nipha virus infection

ஒருபக்கம் கொரோனா தொற்று பாதிப்பு கேரளாவில் குறையாத வேளையில், தற்போது அங்கே நிபா வைரஸும் பரவ ஆரம்பித்திருக்கிறது. கேரளாவிலேயே கோழிக்கோடு மாவட்டத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க இதே கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் தற்போது மரணமடைந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

இந்நிலையில், தமிழகத்திற்கு அண்டைமாநிலமான கேரளாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் மக்களில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியிருக்கிறார்.

குறிப்பாக கேரளாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள கேரளாவை இணைக்கும் சாலைகளில் மிகுந்த விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: