நாட்டுக்கு சுமையாகிப் போன நீர் மின் நிலையங்கள்; என்ன செய்யவேண்டும் இந்தியா? | is india ignorant about the socio-environmental effects caused by hydropower projects

நீர்மின் அணைக்கட்டுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், இயற்கைப் பேரழிவுகளையும் துரிதப்படுத்துகின்றன. `நிலக்கரிக்கு மாற்று சுத்தமான, பசுமையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பான நீன்மின் ஆற்றல் என்னும் எண்ணத்தில் எந்த உண்மையும் இல்லை’ என்கிறார் அணைக்கட்டுகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்கு ஆசிய வலையமைவின் தலைவர் ஹிமான்ஷு தாக்கர்.

2013-ல் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த உத்தரகாண்ட் கேதார்நாத் வெள்ளப் பெருக்கு குறித்து ஆய்வறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தது. குறிப்பாக இங்குள்ள அணைக்கட்டுகள் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுத்திய சேதாரங்களைக் கணிசமாக அதிகப்படுத்துகின்றனவா என்ற கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள ஆணையிட்டது.

நீர்மின் திட்டங்கள்

நீர்மின் திட்டங்கள்

இந்தியாவிலுள்ள மொத்த அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 4,407 ஆகும். சீனா (23,841), அமெரிக்கா (9,263) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணைக்கட்டுகள் அதிகமுள்ள மூன்றாவது நாடாகும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் நீர்மின் திறன் 146 ஜிகாவாட் ஆகும். இதில் 78% அல்லது 112 ஜிகாவாட் இமயமலை மாநிலங்களில் அமைந்துள்ளது. 2020-ம் ஆண்டு நவம்பர் வரை 38 பெரிய நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட மின் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில் நீர்மின் நிலையங்கள் 31%, சூரிய சக்தி மற்றும் காற்றாலை 69% உட்பட இதுவரை 146 ஜிகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.

நீர்மின் நிலைய ஆற்றல் பசுமைக்கான மாற்றம் அல்ல

பல்வேறு ஆய்வுகளின்படி அணைக்கட்டுகளின் கீழுள்ள அழுகும் தாவரங்கள் மீத்தேன் வாயுவை உமிழ்கின்றன. மேலும் அணைக்கட்டுகளுக்குள் பாயும் ஆறுகள் கணிசமான அளவில் கரிமப் பொருள்கள், வண்டல் மண், வேளாண் பணிகள், உரங்கள், மனிதக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நைட்ரஜன் மற்றும் ஃபாஸ்பரஸ் அமிலங்களை நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு வரும்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: