`டைனிக் பாஸ்கர் & பாரத் சமாச்சார் செய்தி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!’ – income tax officials Conducted Raids in Dainik Bhaskar firms offices

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி விட்டதாக அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியப் பத்திரிகையாளர்கள் சுமார் 40 பேர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் தாக்கம் தணிவதற்குள் தற்போது டைனிக் பாஸ்கர் ஊடக நிறுவனத்தில் அதிரடியாக நடத்தப்பட்டுள்ள வருமான வரி சோதனையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகளவில் பத்திரிகை பதிப்பு விற்பனை அளவில் மூன்றாவது இடமும், இந்திய அளவில் முதலிடமும் வகிக்கும் இந்தி செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கர் குழுமம், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மோடி அரசாங்கம் எப்படிச் சமாளித்தது என்பதனை துல்லியமான செய்திகளின் மூலம் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியது. உத்தரப்பிரதேச கொரோனா மரணங்கள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, கொரோனா எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது என கொரோனா கால அவலங்களை அந்த நிறுவனம் தோலுரித்துக் காட்டியிருந்தது. நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கர் குழுமம், உ.பி-யில் கங்கா நதியில் உடல்கள் மிதந்ததையும், அவற்றை மாநில அரசு அவசர அவசரமாக ஆற்றங்கரைகளில் புதைத்ததையும் தனது செய்திகள் மூலம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியது.

டைனிக் பாஸ்கர்

டைனிக் பாஸ்கர்

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியான பெகாசஸ் ஸ்பைவேரின் 40 இந்தியப் பத்திரிகையாளர்கள் பட்டியலில் டைனிக் பாஸ்கர் குழுமப் பத்திரிகையாளர்கள் உள்ளார்களா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், டைனிக் பாஸ்கர் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 30 அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அலுவலகங்களைத் தொடர்ந்து, குழுமத்தின் விளம்பரதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தற்போது டைனிக் பாஸ்கர் குழுமத்தின் ஜெய்ப்பூர், அகமதாபாத், போபால் மற்றும் இந்தூர் அலுவலகங்களில் சோதனைகள் நடந்து வருவதாக டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: