சென்னையின் வளர்ச்சிக்கு நடுவே வீழ்ந்த அடையாறு; ஒரு காலத்தில் எப்படி விளங்கியது தெரியுமா? | Story of adyar river and how it was affected due to chennai-s rapid development

அடையாறு தொடங்குகின்ற மணிமங்கலத்தில், பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான போர் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மகாராஷ்டிரா முதல் கர்நாடகா வரை நீண்டிருந்த சாளுக்கியப் பேரரசு, காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய அந்தப் போர் அடையாற்றுக் கரையில்தான் நடந்துள்ளது. அதேபோல், புனித ஜார்ஜ் கோட்டைக்கான போரில் ஃபிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் படையும் ஆற்காடு நவாப் படையும் மோதியது அடையாற்றுக் கரையில்தான்.

அடையாறு நதிக்கு வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ, அதைவிட அதிக முதன்மைத்துவத்தோடு சமூக ரீதியாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வியலில் பங்கு வகித்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர், அடையாறு முகத்துவாரம் மிகவும் விரிவாக இருந்தது. அன்று நதி நீரைப் பார்த்தால், வானின் நீல நிறத்துக்கு ஒப்பாக இருக்குமென்று தன்னுடைய பழைய நினைவுகளைத் தூசு தட்டி எடுத்து நம்மோடு பகிர்ந்து கொண்டார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் எஸ்.பாளையம்.

அவரிடம் பேசியபோது, “அடையாறு முகத்துவாரத்துல ஷீலா, பதலா, கோலா, வஞ்சிரம்னு மீன்கள் கடலுல இருந்து முகத்துவாரத்துக்குள்ள புகுந்து ஆத்துக்குள்ள வரும். சுறா மீன் கூட உள்ள வர்றதைப் பார்த்துருக்கோம். ஒருகாலத்துல, அடையாற நம்பித்தான் இந்த மக்களோட வாழ்வாதாரமே இருந்துச்சு. அன்னைக்கெல்லாம், அடையாற்றுல வெளிநாட்டுப் பறவையெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பாக்க முடிஞ்சது. மடவு மீனு என்ன, கானாங்கெளுத்தி மீனு என்ன, அது எல்லாத்தையும் பிடிக்க பறவைங்க கூட்டமா வரும். இதுல பொழைக்குறது பல ஆயிரம் பேரு இங்க வந்து வாழலாம். சுருவலை, கொண்ட வலை, விசிறு வலை, மொடா வலை, ஓ வலைனு எத்தன வகையான வலைகள பயன்படுத்தி அடையாத்துல மீன் பிடிச்சாங்க.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: