சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா? | activist oppose the cutting down of palm trees for road extension in villupuram

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, “பனைமரங்கள் வெட்டுவது தடை செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில் பனைமரங்களை வெட்ட வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அனுமதிக்கப்படும். நியாய விலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; 3 கோடி ரூபாய் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும். 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், 1 லட்சம் கன்றுகளும் முழு மானியத்தில் கொடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

மறுமுனைக்கு சபாநாயகர் அப்பாவு, “ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண்மை துறைக்கு நான் தருகிறேன்” என்று கூறி அதிரடி காட்டியிருந்தார்.

இப்படி பனை மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்ட ஓரிரு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிக்காகப் பனை மரங்கள் வெட்டப்படும் செயல் பொதுமக்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

விழுப்புரம் – புதுவை இடையேயான மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியான வளவனூர், கெங்கராம்பாளையம் அருகே நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சமூக ஆர்வலர் கிரில் அலெக்சாண்டர், “வளவனூர் அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரமாக உள்ள பனை மரங்கள் வேக வேகமாக வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு ராட்சத ஜே.சி.பி எந்திரம் சாலை ஓரமாக உள்ள பனை மரங்களை லாவகமாக வேருடன் பெயர்த்து தள்ளுகிறது. மரம் அறுக்கும் ரம்பத்துடன் தயாராக இருக்கும் பணியாளர்கள் சிலர், ஒரு சில நிமிடங்களில் அந்த மரங்களை துண்டு துண்டாக அறுத்தெடுத்து வேன்களில் ஏற்றி விடுகின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த இடத்தில் பனைமரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்ற பனைமரங்களை உருவாக்குவதற்கு பலப் பத்தாண்டுகள் ஆகும். ஆனால் அவற்றை நொடிப்பொழுதில் அகற்றி விடுகின்றனர். இந்தப் பனை மரங்களை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று கையில் எடுத்து செய்துவருவதாகத் தெரிகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: