காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சுப்பிரமணியன் சாமி ஆதரவு… தப்பிப்பாரா கர்நாடக முதல்வர் எடியூரப்பா?| Will Yeddyurappa save his CM post, What is happening in Karnataka

இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,

“கர்நாடகாவில் முதன்முதலில் பா.ஜ.க-வின் ஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜக-வை நடத்த முடியாது. பாஜக-வுக்கு மீண்டும் எடியூரப்பா வந்த பிறகுதான் வெற்றிபெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவற்றைச் செய்கிறீர்கள்” என எடியூரப்பாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார்.

கர்நாடகா அரசியலில் செல்வாக்கு செலுத்தும், லிங்காயத்து மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும் எடியூரப்பாவைத் தொடர்ச்சியாகச் சந்தித்து, தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோரும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். “லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எடியூரப்பாவை கண்ணியமாக நடத்த வேண்டும்” என்றும் அவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி டிவிட்

சுப்பிரமணியன் சுவாமி டிவிட்

எடியூரப்பாவுக்கு எதிராக நடந்துவரும் களேபரங்களுக்குக் காரணம் என்ன, நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகப் பதவி வகித்துவரும் எடியூரப்பா இந்த முறையும் தன்னுடைய பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாமல் தத்தளிப்பது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

2004-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 79 இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சியும், 58 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. முதலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாராசாமி முதல்வரானார். அப்போது, பா.ஜ.க தலைவர் எடியூரப்பா, துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பதவிவகித்தார். தொடர்ந்து, எடியூரப்பாவின் டர்ன் வந்தது. தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் எடியூரப்பா. ஆனால், அந்த சந்தோஷம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது. கூட்டணிக் கட்சியான ம.ஜ.தளம் ஆட்சியைக் கவிழ்க்க, பதவியை இழந்தார் எடியூரப்பா.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: