ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோக்கியோ:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. முதலில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று 3 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்தவர்கள். மற்றொரு வீரர் ஓட்டலில் தங்கி இருந்த வர் ஆவார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த மேலும் 3 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 பேரும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அல்ல. ஒலிம்பிக் கிராமத்தோடு தொடர்புடையவர்கள். ஒரு பத்திரிகையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 95-க்கும் மேற்பட்ட முதல் குழு நேற்று ஜப்பான் சென்றடைந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

நன்றி

Leave a Reply

%d bloggers like this: