ஐன்ஸ்டீனின் குளிர்சாதனப்பெட்டி; உலகையே மிரட்டிய அணு குண்டு தயாரிக்க வித்திட்டது எப்படி? | how a Refrigerator invented by albert einstein paved way for discovering atom bomb

1945-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணு குண்டுகளுக்குப் பின்னால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இருப்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. இந்தப் பேரழிவு நடந்து முடிந்த அடுத்த சில மாதங்களில், வெளியான `டைம்’ இதழின் அட்டைப் படத்தில், அணு குண்டு வெடித்தபோது காளான் வடிவத்தில் வானுயர எழுந்த புகையின் முன்னால், ஐன்ஸ்டீன் படத்தையும் அவர் கண்டுபிடித்த E=mc2 என்ற சூத்திரமும் இடம் பெற்றிருந்தது.

அந்த இதழில் வெளியான கட்டுரை, “ப்ரவுன் நிற கண்களைக் கொண்ட, கூச்ச சுபாவமுள்ள, கிட்டத்தட்ட புனிதரைப் போன்ற தன்மையுடைய, குழந்தைத்தனமுடைய ஒருவரின் செயல், வரலாற்றில் மிகப்பெரிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளது. ஐன்ஸ்டீன் நேரடியாக அணு குண்டு தயாரிப்பதில் பங்கெடுக்கவில்லை.

டைம் இதழின் அட்டைப்படம

டைம் இதழின் அட்டைப்படம

ஆனாலும், அவரை இரண்டு காரணங்களுக்காக, அதன் தந்தை என்று கூறலாம்.

1. அமெரிக்கா, இதற்கான ஆய்வைத் தொடங்கக் காரணமாக இருந்ததே அவருடைய முன்னெடுப்புதான்.

2. அணு குண்டு தயாரிக்கக் காரணமாக இருந்ததே அவர் கண்டுபிடித்த E=mc2 சூத்திரம்தான்” என்று அவரையே இதற்கான தொடக்கப்புள்ளியாகப் பேசியது.

அதேபோல், நியூஸ்வீக் என்ற இதழ், “இவை அனைத்தையும் தொடங்கி வைத்த மனிதன்” என்று ஐன்ஸ்டீனை சாடியது.

ஐன்ஸ்டீன், ஒரு விஞ்ஞானியாக புதியனவற்றைக் கண்டுபிடிப்பது மட்டுமே தன் வேலையென்று இருந்துவிட்ட நபர் இல்லை. அவர், தன்னுடைய கண்டுபிடிப்பு சமூகத்தில் எதுமாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எது நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இந்த முன்னெடுப்பை எடுத்தாரோ, அதுவே இப்படியொரு பெருநாசத்துக்கு வித்திட்டுவிட்டது.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: