என்சிஏ இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் வரும் 13ம்தேதி பதவி ஏற்பு:மே.இ.தீவுகளுக்கு முதல் பயணம் | Laxman to join NCA on Dec 13, will travel with U-19s for World Cup


தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக விவிஎஸ் லட்சுமண் வரும் 12ம் தேதி பதவி ஏற்க உள்ளார். முதல்பயணமாக மே.இ.தீவுகளுக்கு 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியுடன் பயணிக்க உள்ளார்.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியின் இயக்குநராக இருந்த ராகுல் திராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, என்சிஏ அமைப்புக்கு இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு முறைப்படி விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பித்தார்.

விஎஸ்எஸ் லட்சுமண் விண்ணப்பம் பரிசீலக்கப்பட்டு என்சிஏ இயக்குநராக பிசிசிஐ அமைப்புடம் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நியூஸிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வரை வர்ணனையாளராக லட்சுமண் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடர் முடிந்தபின் வரும் 13ம் தேதி என்சிஏ இயக்குநராக லட்சுமண் பதவி ஏற்க உள்ளார். அவருடன் ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், இங்கிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ட்ராய் கூலியும் பதவி ஏற்க உள்ளார்.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ விவிஎஸ் லட்சுமணுடன் பிசிசிஐ ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துவிட்டது.இந்தியா, நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தபின் வரும் 13ம் தேதி என்சிஏவில் லட்சுமண் இணைவார்.

மே.இ.தீவுகளில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்கு 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியுடன் லட்சுமண் செல்வார். அவருடன். என்சிஏ பயிற்சியாளர்கள் ரிஷிகேஷ் கனிட்கர், கோடக் இருவரில் ஒருவர் லட்சுமணுக்கு துணையாக இருப்பார்கள்.

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் தேர்வு செய்யப்படும். ஏறக்குறைய 20 வீரர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுவார்கள், தென் ஆப்பிரிக்காவில் வலைப்பந்துப் பயிற்சிக்கு வீரர்கள் தேவை என்பதால் கூடுதலாக வீரர்கள் செல்வார்கள். இந்திய ஏ அணியிலிருந்தும் சில வீரர்கள் இந்திய அணியில் இணைவார்கள்” எனத் தெரிவித்தார்

நன்றி

Leave a Reply

%d bloggers like this: