உடல் எடையை குறைப்பதற்கான 5 இயற்கை உணவுகள்

டல் பருமன் என்ற பிரச்சினை அதிகரித்து வரும் சூழலில், உடல் எடையைக் குறைக்கும் வழி முறைகளும் அதிகரித்துள்ளன.

எந்தவொரு இரசாயன அல்லது செயற்கை வழி முறைகளும்,  அதிகப்படியான தொப்பை கொழுப்பை அகற்ற உங்களுக்கு முழுவதுமாக உதவாது. அவற்றின் தாக்கம் உடலில் சில உபாதைகளை ஏற்படுத்தும். இயற்கையான எடை குறைப்பு உணவு வழி முறைகள் மட்டுமே ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள முறையில் அதிகப்படியான உடல் கொழுப்பை எரிப்பதில்  பயனளிக்கின்றன. உங்கள் அன்றாட உணவில் இருந்து அதிக கலோரி உணவுப் பொருட்களை நீக்கி, ஆரோக்கியமான இயற்கை உணவுப் பொருட்களை உங்கள் உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற வேண்டும்.

உடல் கொழுப்பை எரிக்க நிச்சயமாக உங்களுக்கு உதவும் சில இயற்கை உணவு பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. இலவங்கப்பட்டை (Cinnamon)
  2. காலிஃபிளவர் (Cauliflower)
  3. ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar)
  4. மஞ்சள் (Turmeric)
  5. காபி (Coffee)

இலவங்கப்பட்டை (Cinnamon)

உங்கள் மதிய உணவு அல்லது காபியில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்ப்பதன் மூலம் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இது இன்சுலின் சுரப்பைக் குறைக்க உதவுவதுடன் உங்கள் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கலோரி அளவைக் குறைப்பதற்கு சாதாரண வெள்ளை சர்க்கரையை  பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை இனிப்பு சுவை கொண்ட இலவங்கப்பட்டையை   சேர்ப்பது சிறந்தது. பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ஜீரண சக்திக்கு உதவும்.

காலிஃபிளவர் (Cauliflower)

வைட்டமின் சி போன்ற பல்வேறு தாதுக்களின் ஒரு சிறந்த இயற்கை மூலமாக காலிஃபிளவர் உள்ளது. வெறும் அரை கப் காலிஃபிளவரை உட்கொண்டால், தினசரி தேவையான வைட்டமின் சி யில் 36% பெறலாம். இந்த காய்கறி குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar)

வினிகர் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. எடை குறைப்பதற்க்கான சிறந்த  வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். உணவில் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்ப்பது  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

Buy Best Apple Cider Vinegar from Amazon.in

மஞ்சள் (Turmeric)

மஞ்சள் என்பது இந்திய உணவு வகைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இது பீட்டா கரோட்டின் (beta carotene) கொண்டிருக்கிறது. இது கல்லீரலைப் பாதுகாப்பதற்கும் அதிகப்படியான உடல் கொழுப்பை எரிப்பதற்கும் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

காபி (Coffee)

ஜீரண சக்தியை விரைவுபடுத்துவதற்கான சக்திவாய்ந்த மூலமாக காபி உள்ளது. காஃபின் (Caffeine)  உங்கள் ஜீரண சக்தியை சுமார் 15%  அதிகரிக்கும் மற்றும் கூடுதல் முயற்சிகள் செய்யாமல் தினசரி அடிப்படையில் 35-50 கலோரிகளை எரிக்க உதவும்.

ஆகையால், இவை போன்ற சில உணவுப் பொருட்களை  உங்கள் அன்றாட வாழ்வில் சேர்ப்பதன் மூலம் எந்தவித பின்விளைவுகளும் இன்றி உடலில் இருந்து அதிகப்படியான கலோரிகளை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் வெளியேற்றி, உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்.

One thought on “உடல் எடையை குறைப்பதற்கான 5 இயற்கை உணவுகள்

  1. Pingback: மனதை ஆரோக்கியமாக வைக்கும் 5 வழி முறைகள் - GoTamilNews

Leave a Reply

%d bloggers like this: