ஈபிஎப் முதலீட்டில் மிகப்பெரிய மாற்றம்.. யாருக்கு என்ன பாதிப்பு..?! | How New EPF rules will impact on your savings and interest income on PF account

நிதியியல் சட்டம் 2021

நிதியியல் சட்டம் 2021

இதேபோல் 2021ல் மத்திய அரசு தாக்கல் செய்த நிதியியல் சட்டம் 2021ல் ஒரு ஊழியர்கள் தனது ஈபிஎப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு, அதற்கு மேல் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இல்லை. 2.5 லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகச் செய்யப்படும் முதலீட்டுக்கு, கிடைக்கும் கூடுதலான வருமானத்தை வருமான வரிக் கணக்கீட்டில் income from other sources பிரிவில் சேர்க்கப்பட்டு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் ஒரே பலன்கள்

அனைவருக்கும் ஒரே பலன்கள்

இந்த மாற்றங்கள் அனைத்தும் அரசு அளிக்கும் ஈபிஎப் கணக்கிற்கான சலுகை சாமானிய மக்களுக்குக் கிடைப்பது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டு உள்ளது என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

இப்புதிய மாற்றங்கள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சகம் தனது பட்ஜெட் அறிக்கையில் தாக்கலின் போது அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இதன் பின்பு ஈபிஎப் கணக்கில் செய்யப்படும் கூடுதலான முதலீடு மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றைக் கணக்கிட புதிய முறையை மத்திய நேரடி வரி அமைப்பு வெளியிட்டது.

 மத்திய நேரடி வரி அமைப்பு

மத்திய நேரடி வரி அமைப்பு

மத்திய நேரடி வரி அமைப்பு ஆகஸ்ட் 31, 2021 வருமான வரி விதி 1962 கீழ் விதி 9D புதிதாக ஒரு விதியை சேர்த்தது. இப்புதிய விதியின் கீழ் 2021-22 நிதியாண்டு முதல் பிஎப் கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகையில் ‘வரிக்கு உட்பட்ட தொகை’ ஒரு கணக்கிலும், ‘வரி விதிப்பு இல்லாத தொகை’யைத் தனிக் கணக்கிலும் வைக்க உத்தரவிட்டுள்ளது.

 கணக்கீடு

கணக்கீடு

இந்த அமைப்பு மூலம் பிஎப் கணக்கில் ஒருவர் செய்யும் முதலீட்டுக்கும், அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தையும் எளிதாகக் கணக்கிட முடியும்.

2.5 லட்சம் ரூபாய்

2.5 லட்சம் ரூபாய்

இப்புதிய விதி மாற்றம் மற்றும் கணக்கீட்டு முறையின் படி வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வருடாந்திர முதலீட்டுக்கு எவ்விதமான வரியும் இல்லை. அதற்கு மேல் செய்யப்படும் முதலீட்டுக்கும் அதற்குக் கிடைக்கும் வரிக்கும் வருமான வரி உண்டு.

3 லட்சம் ரூபாய் முதலீடு

3 லட்சம் ரூபாய் முதலீடு

உதாரணமாக நீங்கள் 3 லட்சம் ரூபாய் தொகையைப் பிஎப் கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இதில் 2.50 லட்சம் ரூபாயை வரி விதிப்பு இல்லாத தொகை கணக்கிலும் (non taxable account), 50000 ரூபாயை வரிக்கு உட்பட்ட கணக்கிலும் (taxable account) வைப்பு வைக்கப்படும்.

 வட்டி வருமானம்

வட்டி வருமானம்

இதில் 2.50 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் 8.5 சதவீத பிஎப் வட்டி வருமானமான 78,030 ரூபாய்க்கும் எவ்விதமான வரியும் இல்லை, ஆனால் 50,000 ரூபாய்க்குக் கிடைக்கும் 2,125 ரூபாய் வட்டி வருமானத்திற்கு வரி உண்டு.

வருமான வரி கணக்கீடு

வருமான வரி கணக்கீடு

இதன் மூலம் 50000 + 2,125 ரூபாய் சேர்ந்து 52,125 ரூபாய் தொகையை வருமான வரிக் கணக்கீட்டில் income from other sources பிரிவில் சேர்ந்து உங்கள் வருமான வரி கணக்கீடு படி வரி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு

Leave a Reply

%d bloggers like this: