இரட்டை தாடை உங்க முக அழகையே கெடுக்குதா?… முகத்திலுள்ள கொழுப்பை குறைக்கும் 6 உணவுகள் இதோ உங்களுக்காக

 

சிலருக்கு பார்த்தால் இரட்டை தாடை பிரச்சினை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் கழுத்துக்கு கீழே உள்ள பகுதியில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. அதிகப்படியான உடல் எடையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மரபணு பிரச்சினைகள் மற்றும் வயதாகுதல் போன்ற காரணங்களாலும் இரட்டை தாடை பிரச்சினையை அனுபவிக்க நேரிடலாம். வயதாகும் போது தாடை பகுதி தொய்வடைந்து போவது உண்டு.

​முகச்சதை

முகத்தில் இப்படி கொழுப்பு படிய என்ன காரணம். குறிப்பாக கொழுப்பானது தொடைகள், பிட்டம், அடிவயிற்று பகுதி, மார்புப் பகுதி, கைகள் மற்றும் முகப் பகுதிகளில் படியும். முகத்தின் மேல் பகுதியில் மண்டை எலும்புகள், தலை தசைகள், கன்னங்கள் மற்றும் தாடைகள் போன்றவை அடங்கும். எனவே கொழுப்பை சேகரிக்க கடைசியாக உள்ள இடம் தாடை தான். எனவே தான் கொழுப்பானது தாடை மற்றும் கன்னப் பகுதிகளில் படிகிறது. இப்படி படிந்துள்ள கொழுப்பை கரைத்து எப்படி இரட்டை தாடை பிரச்சினையை உணவின் மூலம் போக்கலாம் என அறிவோம்.

​கொழுப்பை கரைக்கக் கூடிய சில வகை உணவுகள் :

தக்காளி ஜூஸ் :

தினமும் 3 தடவை தக்காளி ஜூஸை குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும். தக்காளி உங்க உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 3 தடவை தக்காளி ஜூஸை எடுத்து வரலாம்.

​பிரக்கோலி :

பிரக்கோலி உடல் எடையை குறைக்க சிறந்த ஒன்றாகும். இதை நீங்கள் சாலட், சூப்கள் போன்றவற்றில் பயன்படுத்தி வரலாம். பிரக்கோலியில் சல்போராபேன் உள்ளது. இது ஒரு நொதியை உருவாக்க உதவுகிறது. இதுவும் கொழுப்பு செல்களை எரிக்க உதவுகிறது.

​தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய்யில் மீடிய வடிவ ட்ரை கிளைசரைடு சங்கிலி உள்ளன. இது கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து வாருங்கள். மற்ற எண்ணெய்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

​சியா விதைகள் :

சியா விதைகள் எடையை குறைக்க பயன்படும் உணவாகும். சியா விதைகளில் 20% புரோட்டீன், 50% நீர், 30% நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்க பசியை தணிக்கிறது. இது உங்களுக்கு எளிதில் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் உங்க உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். சில சியா விதைகளை 15 நிமிடங்கள் நீரில் ஊற வையுங்கள். நீரில் ஊற வைத்த சியா விதைகளை தினமும் வெறும் வயிற்றில் காலையில் மற்றும் மாலையில் சாப்பிட்டு வாருங்கள். சாலட், ஃபலூடா போன்றவற்றில் கூட இதை நீங்கள் சேர்க்கலாம்.

​பட்டை பொடி :

கொழுப்பை எரிக்க பட்டை பொடி சிறந்த ஒன்றாகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது கொழுப்பு சேர்வதை தடுக்கவும், எடையை இழக்கவும் பயன்படுகிறது. 3-4 கிராம் பட்டை பொடியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் டீ, சாலட், ஸ்மூத்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

​க்ரீன் டீ :

க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் எனப்படும் எபிகல்லோகாடெசின் கலேட் எனப்படும் பொருள் காணப்படுகிறது. இது கொழுப்பு செல்களை உடைத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. 3 கப் க்ரீன் டீயை தினமும் 3 வேளை குடித்து வாருங்கள். இது முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆல்கஹாலை தவிருங்கள். நன்றாக தூங்க வேண்டும். அதே மாதிரி உங்க முகத்திற்கு ஏற்ற பொருத்தமான ஹேர் கட்டை தேர்ந்தெடுங்கள். அது உங்க முகத்தை ஒல்லியாக காட்டும்.

Leave a Reply

%d bloggers like this: