ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கிய புலி; உயிரிழந்த சோகம்! | Nilgiris Shepherd killed by tiger inside the forest

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் ஆகியவை இணைந்த இந்த முச்சந்திப்பு பகுதி உலகிலேயே காடுகளில் அதிகளவு எண்ணிக்கையிலான புலிகள் வாழும் வனவளம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த காப்பகங்களை ஒட்டிய பகுதிகளில் பழங்குடிகள் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களின் குடியிருப்புகள், விளை நிலங்கள் அதிகளவில் உள்ளன.

அப்படியிருந்தும் முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி-மனித எதிர்கொள்ளல்கள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முதுமலை சிங்காரா வனப்பகுதியில் கௌரி என்ற பழங்குடி பெண் ஒருவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முதுமலை முதுகுழி பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் என்ற முதியவர் தற்போது புலி தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: